இந்தோனேசியாவில் மண்ணில் புதையுண்ட 21 பேர் – மீட்பதில் சிரமம்!
இந்தோனேசியாவின் ஜாவா(Java) தீவில் பெய்த கனமழையால் ஏற்பட் நிலச்சரிவில் சிக்கி 02 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏறக்குறைய இருபதிற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் நேற்று குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
“நிலையற்ற தரை நிலைமைகள் மீட்பு பணியாளர்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கையை விரைவுபடுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் மாயமான 21 பேரை கண்டுப்பிடிப்பதில் சிரமம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





