துருக்கியில் 2,050 ஆண்டுகள் பழமையான ரோமானிய கவுன்சில் மண்டபம் கண்டுப்பிடிப்பு!
துருக்கியில் 2,050 ஆண்டுகள் பழமையான ரோமானிய கவுன்சில் மண்டபத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது வெளிப்படுத்தல் புத்தகத்துடன் தொடர்புடைய மர்மமான கிறிஸ்தவ சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு தேவாலயங்களில் ஒன்றான லவோதிசியா, ஆரம்பகால கிறிஸ்தவ போதனைகளைப் பெற்ற ஒரு சமூகமாக இருந்ததை வெளிப்படுத்துகிறது.
பவுலியூட்டரியன் என்றும் அழைக்கப்படும் இந்த மண்டபம், கிமு 50 இல் தொடங்கி நகரத்தின் அரசியல் மற்றும் நீதித்துறை மையமாக செயல்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
இதில் 800 பேர் வரை தங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





