2040 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
பொருளாதார இலக்குகளை அடையும் அதேவேளையில் 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற இலக்கை அடைவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற உலகளாவிய இலக்கை தனது தேசிய கொள்கையில் உள்ளடக்கிய ஆசியாவின் முதல் நாடு இலங்கை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு சலுகைகளைப் பெற உலகின் வளர்ந்த நாடுகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
இந்த ஆண்டு உக்ரைன் போருக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் பயன்படுத்திய பணம் இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானது என்றும் ஜனாதிபதி கூறினார்.
முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைக் கையாள்வதில் இலங்கையின் தற்போதைய வகிபாகத்தை பாரம்பரிய ஏற்பாடுகளுடன் மட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டார்.
இது மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.