அரசியல் இலங்கை செய்தி

கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கு இன்று: டாக்கா பறந்தார் விஜித ஹேரத்!

  • December 31, 2025
  • 0 Comments

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் Khaleda Zia இறுதிச்சடங்கு இன்று (31) நடைபெறுகின்றது. தெற்காசிய நாடுகளில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தவுள்ளனர். இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பங்கேற்கின்றார். இதற்காக இன்று காலை அவர் பங்களாதேஸ் தலைநகர் டாக்கா நோக்கி பயணமானார். பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். ஆவரின் மறைவையொட்டி பங்களாதேஸின் மூன்று நாட்கள் […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று நாடாளுமன்று உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் சிறுபான்மையினக் கட்சிகள் இதற்கு இடமளிக்காது. அக்கட்சிகளின் அனுமதியுடன்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும். […]

உலகம்

2025 இல் மாத்திரம் 66 சதவீதம் உயர்ந்த தங்கத்தின் பெறுமதி : வெள்ளியும் வரலாறு காணாத அளவு உயர்வு!

  • December 31, 2025
  • 0 Comments

சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.8% உயர்ந்து $4,364.70 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து $4,386.30 என்ற அளவில் நிலைப்பெற்று வருகிறது. இது வரும் ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்றம் காணும் என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கம், 2025 ஆம் ஆண்டில் 66% உயர்ந்துள்ளது. இது  1979 க்குப் பிறகு பதிவான  செங்குத்தான ஏற்றம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வலுவான மத்திய வங்கி கொள்முதல்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் […]

உலகம்

காசாவில் பணிப்புரியும் உதவிக் குழுக்களின் உரிமங்களை இரத்து செய்த இஸ்ரேல்

  • December 31, 2025
  • 0 Comments

காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பணிபுரியும் 37 உதவி குழுக்களின் உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பிற்கு அமைய ஆக்சன் எய்ட், சர்வதேச மீட்புக் குழு மற்றும் நோர்வே அகதிகள் கவுன்சில் போன்ற நன்கு அறியப்பட்ட சர்வதேச அரசு சாரா அமைப்புகளின் (INGOக்கள்) உரிமங்கள் ஜனவரி 1 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படும். அவற்றின் செயல்பாடுகள் 60 நாட்களுக்குள் முடிவடையும்.   குழுக்கள் தங்கள் ஊழியர்களின் “முழுமையான” தனிப்பட்ட விவரங்களை ஒப்படைக்கத் தவறிவிட்டதாக கூறியே […]

இந்தியா

ஜப்பானை பின்தள்ளிய இந்தியா : இனி சீனா மற்றும் அமெரிக்கா மாத்திரமே இலக்கு!

  • December 31, 2025
  • 0 Comments

இந்தியா இந்த ஆண்டில் பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. தற்போதைய போக்குகளைப் பொறுத்தவரை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா ஜெர்மனியை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக  மாறும் என்று மதிப்பாய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கனவே சுமார் $4.18 டிரில்லியன் (€3.55 டிரில்லியன்) ஐ எட்டியுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகரசபையில் ஊழல்: விசாரணைக்குழு நியமனம்: ஜனாதிபதி அதிரடி!

  • December 31, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஏக்க நாயக்க ஆகியோரும் மேற்படி குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் […]

இலங்கை

வரி குறைப்பு : அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசரக் கடிதம்!

  • December 31, 2025
  • 0 Comments

இலங்கை மீதான இறக்குமதி வரிகளை ஒரு வருட காலத்திற்கு  தற்போதைய நிலையில் இருந்து 12 சதவீதமாக குறைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேற்படி கடிதத்தில் தித்வா சூறாவளி தாக்கத்தின் போது தகுந்த நேரத்தில் அமெரிக்கா வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் டொலர் அவசர உதவி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்க இராணுவ விமானப் போக்குவரத்து திறன்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு வலியுறுத்து!

  • December 31, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழிகள் கடந்தகாலங்களில் வழங்கப்பட்டன. எனினும், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும், சந்திரிக்கா அம்மையார் அதற்குரிய முயற்சியை முன்னெடுத்தார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடமளிக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளசுக்கு வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள் குறித்து தீவிர விசாரணை!

  • December 31, 2025
  • 0 Comments

“முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa. தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது டக்ளஸ் தேவானந்தா கைது கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே […]

error: Content is protected !!