மலையகத்தில் குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் கடுமையாகும் சட்டங்கள்!
மத்திய மலைநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் குடியிருப்புகளை உருவாக்குவது தொடர்பில் கடுமையான சட்டங்களை உருவாக்குவது, அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கனமழை ஏற்பட்டால் பதுளை மாவட்டத்தின் நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து ஆபத்தான பகுதிகளை மதிப்பிடுவதற்கு புதிய வரைபடம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன கூறியுள்ளார். கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் […]













