இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் ஏற்படப் போகும் மாற்றம்

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

இலங்கை

இலங்கையில் 611 பேரை பலி வாங்கியது டித்வா புயல்…

  • December 6, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்!

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் ஆயிரத்து 800 வீடுகள் முழமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 670 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் இலங்கை

நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம்: சாமர எம்.பி. எச்சரிக்கை!

  • December 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணியவேண்டிய நிலை (சிறை தண்டனை) ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். “ மண்சரிவு அனர்த்தம் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. ஆனால் படிப்படியாக நீரை திறந்திருந்தால் பாரிய வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பொறுப்பு கூறவேண்டும். பன்னலயில் முதியவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். இப்படியான துயர் சம்பவங்கள் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் விபரம்

  • December 6, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 86 ஆயிரத்து 313 பேர் பாதிப்ப!! திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 86 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார  தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (06) வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 216 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் 25981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூதூர் பிரதேசத்தில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 9530 குடும்பங்களைச் சேர்ந்த 31835 பேர் […]

இலங்கை செய்தி

மூதூரிற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திருத்த பணி ஆரம்பம்

  • December 6, 2025
  • 0 Comments

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணியில் இராணுவத்தினர் பிரதேச மக்கள் நீர் வளங்கள் அதிகார சபையினர் குறித்த திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கட்டைபறிச்சான் மூதூர் அம்மன்நகர் கங்குலேலி உள்ளிட்ட அண்மைக் கிராமங்களில் உள்ள மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

இலங்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • December 6, 2025
  • 0 Comments

இன்று (04) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை […]

இலங்கை

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார். இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

  • December 6, 2025
  • 0 Comments

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதி உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளுக்காக நிதிகோரி முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்காகவே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், குறைநிரப்பு பிரேரணைக்கு […]

அரசியல் இலங்கை

அவசரகால சட்டத்தை அடக்குமுறை ஆயதமாக பயன்படுத்தவில்லை: ஜனாதிபதி விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது […]

error: Content is protected !!