இலங்கை செய்தி

கோத்மலை மண்சரிவு: 15 பேர் பலி, 50 பேர் காயம்

  • November 29, 2025
  • 0 Comments

கோத்மலை பிரதேசத்தின் ரம்போடகல பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.   சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் அவர்கள் கோத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்சரிவு சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்டுள்ளது.   ரம்போடகலாவிற்கான அனைத்து நுழைவு வீதிகளும் தற்போது தடைப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கோத்மலை மாவட்ட பிரதேச செயலகம் தெரிவித்து ளது.

இலங்கை செய்தி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கை

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி நவம்பர் 28, மாலை 6 மணி வரை 1,297 குடும்பங்களைச் சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்கவர்கள் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த […]

இலங்கை செய்தி

இலங்கையின் அனர்த்த நிலைமை: குடும்பங்களுக்கான அவசர உதவி எண்கள்

  • November 28, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது வெள்ளம், மண்சரிவு மற்றும் கடுமையான போக்குவரத்துத் தடங்கல்கள் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. நாடு ஒரு பாரிய தேசிய அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நிலைமைகள் வேகமாக மாறுவதால், அனைவரும் அமைதியாகவும், எதற்கும் தயாராகவும் இருப்பது முக்கியம். அடுத்த சில நாட்களை பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் கடக்க குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவும் நோக்கில் இந்த வழிகாட்டல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி எண்கள் (Emergency Hotlines) – இவற்றை உடன் வைத்திருக்கவும்! உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ […]

இலங்கை செய்தி

சுகாதாரத் துறையில் ஒரு வார கால அவசர நிலை பிரகடனம்

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகளின் தேவையை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இன்று (நவம்பர் 28) முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குச் சுகாதாரத் துறையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையில், நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் 24 மணி நேரமும் நோயாளர் பராமரிப்பை உறுதி செய்வதற்கான அவசர […]

இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிவாரண நிதி வழங்க அரசாங்கம் அழைப்பு

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவ, புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிதி உதவிகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (President’s Media Division – PMD) இன்று வெளியிட்டுள்ளது. நன்கொடைக்கான வங்கிக் கணக்குகள் நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, இரண்டு பிரத்தியேக வங்கிக் கணக்குகள் நிறுவப்பட்டுள்ளன: உள்ளூர் நாணயத்தில் வழங்கப்படும் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு கணக்கும் வெளிநாட்டு நாணயத்தில் (அமெரிக்க டாலர்) வழங்கப்படும் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக […]

இலங்கை செய்தி

கம்பஹா வெள்ள அபாய எச்சரிக்கை செய்தி

  • November 28, 2025
  • 0 Comments

அத்தனகலு ஓயா (Attanagalu Oya) ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக, கம்பஹா மாவட்டத்திற்கும் (Gampaha District) அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளனர். இந்த அவசர நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான அறிவுறுத்தல்கள் பின்வருமாறு: அத்தனகலு ஓயா ஆற்றில் நீர் வரத்து மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, வெள்ளப் பாதிப்பைத் […]

இலங்கை செய்தி

ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக 6.5 டன் பொருட்கள் நன்கொடை

  • November 28, 2025
  • 0 Comments

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant), இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது இருப்பில் இருந்த பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கப்பல் இருப்பு கிடங்கில் இருந்து 4.5 டன்கள் (4500 கிலோ) உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மற்றும் கூடுதலாக, 2 டன்கள் (2000 கிலோ) எடையுள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு உதவக்கூடிய கூடாரங்கள் (tents), அவசரகால பயன்பாட்டுக்கான மின்சார டார்ச் விளக்குகள் (electric torches) […]

இலங்கை செய்தி

விமானப்படையினாரால் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்பு

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரத்தின் அவுகன பகுதியில் கலா வெவா வெள்ளப்பெருக்க்கில் நேற்று மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவரை , இன்று 28 .11.2025 ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் 7வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் மன்னம்பிட்டிய பாலத்தில் சிக்கி 06 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

இலங்கை செய்தி

பதுளை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலனிலை காரணமாக பதுளை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பல வீதிகளின் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது. இன்று காலை மண்சரிவினால்அப்புத்தளை எட்டம்பிட்டிய,பண்டாரவளை விதி பதுளை கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளை பண்டாரவளைக்கு இடையில் கோணமுட்டவ பகுதியின் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் மொணராகல கும்பகன்ன பாடசாலை முற்றாக நீரில் முழ்கப்பட்டுள்ளது. மலையக தொடருந்து பாதையும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தை பொருத்தவரையில் பல பிரதேசங்கள் மழையினால் […]

இலங்கை செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

  • November 28, 2025
  • 0 Comments

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, 2025 நவம்பர் 27 ஆம் திகதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 911 […]

error: Content is protected !!