செய்தி

இலங்கையில் அரச சேவையில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி – ஜனாதிபதியின் புதிய பயிற்சித் திட்டம்

  • November 1, 2025
  • 0 Comments

அரச உத்தியோகத்தர் மத்தியில் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகமும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இணைந்து அமுலாக்கும் “AI for Transforming Public Services” என்ற பயிற்சி நெறி சமீபத்தில் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல் ஊடாக அரச துறையில் நவீனங்களைப் புகுத்தி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், பொது மக்கள் சேவையைச் செயற்றிறன் வாய்ந்தவையாக மாற்றுதல், வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல், டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகளுக்காகத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எலான் மஸ்கின் க்ரோகிபீடியா – தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி

  • November 1, 2025
  • 0 Comments

பிரபலமான விக்கிப்பீடியாவிற்கு (Wikipedia) போட்டியாக க்ரோகிபீடியா (Grokipedia) என்ற புதிய AI வலைத்தளத்தை உலகின் முதல்தர கோடீஸ்வரர் வர்த்தகரான எலான் மஸ்கின் (Elon Musk) xAI நிறுவனம் உருவாக்கியுள்ளது. உண்மையான தகவல்களை மட்டும் அடிப்படையாக் கொண்ட ஆன்லைன் களஞ்சியமாக க்ரோகிபீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவுக்கு எதிர்மறையான கொள்கைகளைக் கொண்ட வகையில் க்ரோகிபீடியா அமைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். க்ரோகிபீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளும் AI மற்றும் க்ரோக் (Grok) எனப்படும் ஒரு ஜெனரேட்டிவ் AI மூலம் திரட்டப்படுவதாக அதன் […]

உலகம்

வல்லரசான அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள மூடநம்பிக்கை – 13 இலக்கத்தில் மர்மம்

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 13 என்ற இலக்கம் தொடர்பில் மூடநம்பிக்கை நீண்டகாலமாக நீடித்து வருவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நியூயோர்க்கில் இந்த மூட நம்பிக்கை அதிகரித்துள்ளதுடன், 13 என்ற இலக்கத்தை பலரும் வெறுப்பதாக தெரியவந்துள்ளது. கட்டடத்துறை சார்ந்த துறையில் பணியாற்றுவோர், தாம் நிர்மாணிக்கும் கட்டடங்களில் 13 என்ற தளத்தை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13ஆவது தளம் இல்லாத பல கட்டடங்கள் நியூயார்க்கில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்ட்ரீட் ஈஸி (StreetEasy) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் […]

உலகம்

பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா – அமெரிக்கா! 10 ஆண்டுகளுக்கான புதிய உடன்படிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

அடுத்த பத்தாண்டுகளில் தமக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விஸ்தரித்துக் கொள்ளும் நோக்கத்துடன், இந்தியாவும், அமெரிக்காவும் சட்டக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Heggseth), இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை மலேசியத் தலைநகரில் இடம்பெற்றது. இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் வரி விதித்து வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் சூழ்நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய செய்தி வெளியாகிறது.

உலகம் செய்தி

ஜப்பானில் கரடிகள் கொன்றொழிக்க ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

  • November 1, 2025
  • 0 Comments

ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் கரடிகளைக் கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வது பற்றி அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அனுமதி பெற்ற வேட்டைக்காரர்களையும், கரடிகளைக் கையாளக் கூடியவர்களையும் வாடகைக்குப் பெற நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதாக ஜப்பானின் சுற்றுச்சூழல்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாண்டு மாத்திரம் நகர்ப்புறங்களை ஊடுருவிய கரடிகள் தாக்கி ஜப்பானில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.