கணவனைக் கொல்பவர்களுக்கு ரொக்க பரிசு – வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்ட மனைவி
கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்ட பெண் மீது இந்திய பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் ஆக்ராவின் பா மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு எதிராக இந்திய பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். 50,000 இந்திய ரூபாய் பரிசு வழங்குவதாக இந்த பெண் தனது வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்டுள்ளார். தன்னைக் கொலை செய்பவருக்கு ரொக்கப் பரிசு தருவதாக மனைவியின் வாட்ஸ்அப் கணக்கில் வெளியான செய்திகளைப் பார்த்த பெண்ணின் கணவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். […]













