பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! பொன்சேகா சஜித்திற்கு எச்சரிக்கை
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை சமகி ஜன பலவேக அமைப்பில் இருந்து நீக்காவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவர் கூறினார். எவ்வாறாயினும், தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை எனவும், நியமனத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் […]