2023 IMMAF உலக சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்த விருத்தி குமாரி
வெள்ளி பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த விருத்தி குமாரிக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.உருகுவேயின் ஜிமெனா ஒசோரியோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இந்திய வீராங்கனை விருத்தி குமாரியின் வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது
இது விருத்தியின் இரண்டாவது IMMAF உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தைக் குறிக்கிறது, 2021 இல் போது வெண்கல பதக்கதை வென்ற விருத்தி,இந்த ஆண்டு தற்போது ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றார்.வர இருக்கும் காலங்களில் இந்தியாவிற்கு நிச்சயம் தங்க பதக்கம் கிடைக்கும் என எதிர் பாக்கலாம்
விமான நிலையத்தில் விருத்திகுமாரியின் பேட்டி: 2023-24 ஆன அல்பேனியா நாட்டில் நடைபெற்ற உலகளாவிய கலப்பு தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொண்டு நான் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்று கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் நான் கலந்து கொண்டு இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளேன்.முதல் முறை வெண்கல பதக்கத்தையும் இந்தமுறை வெள்ளி பதக்கத்தையும் பெற்று கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இறுதிப் போட்டி மட்டுமே எனக்கு சற்று கடினமாக இருந்த உருகுவேயின் ஜிமெனா ஒசோரியோ எனக்கு நெருக்கடி தந்தார்.
நான் நான்கு வருடமாக இந்த போட்டிக்கு பயிற்சி பெற்று வருகிறேன்.இதற்காக நான் என் குடும்பத்தையும் விட்டு வெளிநாடுயான தாய்லாந்து பாலி சென்று பயிற்சி பெற்றேன்.தமிழக அரசிடம் இருந்து எனக்கு தேவையான உதவிகள் மற்றும் மரியாதைகளும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் இருந்து கிடைத்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் எனது ஒரே ஒரு கோரிக்கை,மென்மேலும் எம் எம் ஏ போட்டியை வளர்க்க உதவிட வேண்டும்.நான் ஆறு மாதம் ஒரு வருடம் வீட்டில் இருந்து பயிற்சி பெற்று வந்தேன்.எனக்காக என் தாய் தந்தைகள் நிறைய தியாகங்களை செய்துள்ளனர்.எனது முழுஆதரவு அளித்தது என்னுடைய பெற்றோர்கள் மட்டும்தான். எல்லா பெற்றோருக்கும் நான் சொல்வது உங்கள் பெண் குழந்தைகள் வெளியுலகில் கொண்டு வந்து பல்வேறு சாதனைகளை படைக்க வைக்க வேண்டும் என்றும், இறுதியாக எனது தாய் தந்தைக்கு நன்றி எனது பயிற்சியாளருக்கு நன்றி எனது நண்பர்களுக்கு நன்றி என்று ஆனந்த கண்ணீரில் பேட்டி கொடுத்தார் இந்தியாவின் வெள்ளி வீராங்கனை விருத்தி குமாரி அவர்கள்.