ஐரோப்பிய நாடொன்றில் விந்தணுக் கொடையாளரால் பாதிக்கப்பட்டுள்ள 200 குழந்தைகள்!
டென்மார்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்துடன் வாழும் நபர் ஒருவர் விந்தணுக்களை தானம் செய்ததன் காரணமாக சுமார் 200 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தானம் செய்த குறித்த நபர் TP53 என்ற மரபணு மாற்றத்தை கொண்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது 60 வயதிற்கு முன்பே புற்றுநோய் உருவாகும் அபாயத்தை 90 சதவீதம் வரை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நன்கொடையாளர் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
சில குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் எஞ்சிய குழந்தைகளில் சிலர் மாத்திரமே உயிர் பிழைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விந்தணு இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படவில்லை. இருப்பினும் சில பிரித்தானிய தம்பதியர் டென்மார்க் நாட்டில் வைத்து விந்தணுவை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்கொடையாளர் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது சில செல்களில் உள்ள டிஎன்ஏ உருமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி TP53 என்ற மரபணு சேதடைந்துள்ளதாகவும், இது புற்றுநோயை தடுப்பதற்கு முக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




