20 வயது பெண்ணுடன் சூர்யாவின் மேஜிக்கல் காதல்; கசிந்தது சூர்யா 46 கதை!
நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், சூர்யா தனக்கும் மமிதா பைஜுவுக்கும் இடையிலான 25 வயது வித்தியாசக் காதல் கதையில் நடிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் அளித்த பேட்டியில், “சூர்யா 46” படத்தின் கதை 45 வயதுடைய ஆணுக்கும், 20 வயதுடைய பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் பற்றியது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இப்படத்தில் சூர்யா 45 வயதுடைய செல்வந்தராகவும், ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு 20 வயது கல்லூரிப் பெண்ணாகவும் நடிக்கின்றனர்.
சூர்யாவின் பிளாக் பூஸ்டர் படமான ‘கஜினி’யில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தைப் போலவே இப்படத்திலும் சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருக்கும் என்று தயாரிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹைதராபாத், திருநெல்வேலி போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமான தலைப்பு சூட்டப்படவில்லை என்றாலும், திரையுலக வட்டாரத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது.
இப்படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ (Vishwanathan and Sons) என்று பெயரிடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு குடும்பப் பாங்கான கதை என்பதால், இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு கருதுவதாகத் தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 23, 2025) ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சூர்யா மிகவும் ஸ்டைலான, ‘Vintage’ சூர்யா (கஜினி சஞ்சய் ராமசாமி லுக்) போலக் காட்சியளித்தார். இதுதான் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதே போல் மமிதா பைஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 2025), படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டது. அதில் அவர் மிகவும் எதார்த்தமான மற்றும் துடிப்பான இளம்பெண் தோற்றத்தில் இருந்தார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் கடந்த வாரம் (டிசம்பர் 15, 2025) வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரியவருகிறது.
மற்றும் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே, இதன் ஓடிடி (OTT) உரிமத்தை நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் சுமார் ₹85 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் 2026 கோடை விடுமுறை (Summer 2026) விருந்தாக திரைக்கு வரத் தயாராகி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் (வாத்தி, லக்கி பாஸ்கர் புகழ்) என்பது குறிப்பிடத்தக்கது, இந்தப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
மேலும் இத் திரைப்படத்தில் சூர்யா, மமிதா பைஜு, இணைந்து ரவீணா டாண்டன், ராதிகா சரத்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.





