விளையாட்டு

20 அணிகள்: 55 ஆட்டங்கள்! : T-20 உலகக்கிண்ண தொடர் ஆரம்பம்!

கிரிக்கெட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி ஆடவர் ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகின்றது.

20 அணிகள் பங்கேற்கும் மேற்படி தொடரை தெற்காசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன.

தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.

இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை லீக் சுற்று போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 8 சுற்று பிப்ரவரி 21-ம் திகதி முதல் மார்ச் 1-ம்திகதிவரை நடைபெற உள்ளது.

மார்ச் 4-ம ;திகதி முதல் அரையிறுதி, 5-ம் திகதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும்.

இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8-ம் திகதி நடத்தப்படும்.
லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!