இந்தியா-வங்கதேச எல்லையில் 2.82 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகே தங்க பிஸ்கட் கடத்தல்காரர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர், வங்காளதேசத்திலிருந்து ஹொரண்டிபூர் பகுதி வழியாக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத தங்கத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து சுமார் 2.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்களும், கைது செய்யப்பட்ட நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக BSF வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)