உலகம் செய்தி

பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு – ஆயிரக்கணக்கானோர் தவிப்பு!

பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு சாண்டா குரூஸ் (eastern Santa Cruz) பகுதியில் நிரம்பி வழியும் நதி பொலிவியால் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியாளர்கள் முன்னர் அணுக முடியாத இடங்களை தற்போது அணுக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடுமையான மழை காரணமாக   ஏராளமானோர்  காணாமல் போயுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் ஹெலிகாப்டர் மூலம் குறைந்தது 300 பேர் மீட்கப்பட்டதாகவும், பிராய் (Pirai)  நதியைச் சுற்றி இதுவரை சுமார் 2,100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு அமைச்சர் ஆல்ஃபிரடோ ட்ரோச் (Alfredo Troche) தெரிவித்துள்ளார்.

எல் நினோ மற்றும் லா நினா வானிலை முறைகளின் ஒருங்கிணைந்த விளைவுகள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர், இது அமேசான் படுகையில் அதிக மழைப்பொழிவை உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!