டெல்லியில் 4வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 2 மாணவர்கள்
வணிக நிர்வாக இளங்கலை(BBA) மாணவர்கள் இருவர் ஓர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த இஷான் மற்றும் டெல்லியின் பாலம் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் ஆகிய இருவரும் குதித்து இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பகவான் பரசுராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் BBA படித்து வந்தனர்.
“உள்ளூர் விசாரணையில், தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்த இரண்டு நபர்கள் ஜன்னல் வழியாக விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அவர்கள் பார்ட்டியில் ஈடுபட்டார்களா அல்லது ஏதேனும் சண்டை நடந்துள்ளதா என்றும் போலீசார் சோதனை செய்தனர்.
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது, சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.