செய்தி தமிழ்நாடு

2 நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய நபர் தப்பி ஓட்டம்

மதுரவாயல் அருகே வானகரத்தில் 2 நாட்டு வெடிகுண்டுடன் சிக்கய நபர் தப்பி ஓட்டம் ,நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி போலீசார் விசாரனை.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அடுத் வானகரம் சிக்னலில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை.

செய்தபோது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளிக்கவே மேற்படி அந்த நபரை விசாரித்த போது அவர் அங்கிருந்து திடீரென தப்பி ஓடி உள்ளார் மேலும் தப்பிஓடும் போது அவர் எடுத்து வந்த கைப்பையைய் சோதனை.

செய்தபோது அதன் உள்ளே இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி ஒன்று இருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரிடம் அதனை ஒப்படைத்து உள்ள நிலையில் அது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய நபர் வந்த பைக் திருட்டு பைக் என்று தெரிய வரவே அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர் அந்த இடத்தில்.
மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டை பத்திரமாக அப்பகுதியில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்த நபர் யார் அவர் யாரேனும் கொலை செய்யும் நோக்குடன்.

அதை எடுத்து வந்தாரா என்ற கோணத்தில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டை பத்திரமாக காலி மைதானத்தில் வைத்து வெடிக்க செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.2 தினம் முன்பு சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசீ ரவுடியைய் கொல்ல கொலை முயற்சியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!