செல்லப்பிராணியை கொன்ற 2 பிரித்தானிய பெண்கள்: வாழ்நாள் தடை விதித்த நீதிமன்றம்
துன்பகரமான முறையில் செல்லப்பிராணி கிளியை கொன்ற இரண்டு பிரித்தானிய பெண்களுக்கு 25 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் துன்பகரமான முறையில் நண்பரின் செல்லப்பிராணி கிளியை கொன்ற 2 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். BBCயின் அறிக்கைப்படி, நிக்கோலா பிராட்லி மற்றும் ட்ரேசி டிக்சன் ஆகிய இரண்டு பெண்கள் கார்லிஸ்லே-வில் நீண்ட மதுவிருந்தில் இருந்த போது ஸ்பார்க்கி என்ற பெண் ஆப்பிரிக்க சாம்பல் கிளியை கொலை செய்துள்ளனர்.
கிளிக்கு எதிராக துன்பகரமான செயலில் இறங்கிய அந்த பெண்கள் கிளி மீது சுத்தம் செய்யும் பொருட்களை தெளித்து கிளியின் கழுத்தை உடைப்பதற்கு முன்னதாக டம்பிள் டிரையரில்(tumble dryer) வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு குடிபோதையில் இருந்த அவர்களுக்கு தங்களுடைய வீட்டிற்கு போவதற்கு லிஃப்ட் கொடுத்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கிளியின் உரிமையாளர் க்ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.பின்னர் வீட்டிற்கு திரும்பிய பிறகு, ஸ்பார்க்கி பதிலளிக்காமல் இருப்பதையும், கூண்டுக்கு வெளியே ஸ்பார்க்கி-யின் தலை தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தாக க்ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செல்லப்பிராணி ஸ்பார்க்கி கிளியை துன்பகரமான முறையில் கொன்ற இரண்டு பெண்களுக்கும் பிராட்லி கிரவுன் நீதிமன்றம் 25 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.அத்துடன் இருவரும் வாழ்நாள் முழுவதும் செல்லப்பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.