குஜராத்தில் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட 19 வயது பெண்
குஜராத்தின்(Gujarat) காந்திநகர்(Gandhinagar) மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பதான்(Pathan) மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு இளங்கலை(Bachelor of Arts) மாணவியான 19 வயது ஷிவானி அஹிர்(Shivani Ahir) தனது விடுதியில் இருந்து புதன்கிழமை மாலை காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் அவரைக் காணாததால் கல்லூரி நிர்வாகமும் அதிகாரிகளும் வளாகத்தில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கி உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஷிவானியின் உடல் காலியான வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம், அவர் ஒரு மேசையின் மேல் நின்று விசிறியில் ஒரு தாவணியைக் கட்டி பின்னர் அவர் கீழே வந்து தனது தொலைபேசியை பார்த்து மீண்டும் மேசையில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.





