இலங்கையில் நாய் கடியால் ஒரு வருடத்தில் 184,926 பேர் பாதிப்பு!

இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை சுமார் 184,926 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் ரூ. 850 முதல் ரூ. 1,000 மில்லியன் வரை செலவிட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.
(Visited 1 times, 1 visits today)