வட கரோலினாவில் புத்தாண்டு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட 18 வயது இளைஞர் கைது
வட கரோலினாவின்(North Carolina) புறநகர் நகரமான மிண்ட் ஹில்லில்(Mint Hill) புத்தாண்டு தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக 18 வயது இளைஞன் மீது அமெரிக்காவில் உள்ள கூட்டாட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு(FBI) அதிகாரிகள் சந்தேக நபரை மிண்ட் ஹில்லில் வசிக்கும் கிறிஸ்டியன் ஸ்டர்டிவன்ட்(Christian Sturdivant) என அடையாளப்படுத்தினர்.
கிறிஸ்டியன் ஸ்டர்டிவன்ட்டின் திட்டங்களின் இலக்குகள் மிண்ட் ஹில்லில் உள்ள ஒரு மளிகைக் கடை மற்றும் ஒரு துரித உணவு உணவகம் ஆகும்.
இந்நிலையில், இந்த முறியடிப்பு மூலம் “எண்ணற்ற உயிர்கள் இங்கே காப்பாற்றப்பட்டன” என்று அமெரிக்க வழக்கறிஞர் ரஸ் பெர்குசன்(Russ Ferguson) ஒரு செய்தி மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.




