விமானத்தில் 18+ படம்.. சங்கடத்திகு உள்ளான பயணிகள் – மன்னிப்பு கோரிய குவாண்டாஸ் நிறுவனம்
ஜப்பான் நாட்டிற்குச் சென்ற விமானத்தில் எல்லா ஸ்கிரீன்களிலும் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதை ஆஃப் செய்ய விமான குழு முயன்ற போதிலும் அது முடியவில்லையாம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே ஆபாசப் படத்தை நிறுத்த முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஜப்பானின் ஹனேடா நகருக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானம் பறந்து கொண்டு இருந்த போது திடீரென அதில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பொதுவாகச் சர்வதேச விமானங்களில் பயணிகள் நேரத்தைக் கழிக்க சீட்கள் முன்பு இருக்கும் ஸ்கீரின்களில் இதுபோன்ற திரைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
தொழில்நுட்ப கோளாறால் விமானத்தில் இருந்த அனைத்து ஸ்கிரீன்களிலும் 18+ ஹாலிவுட் படம் ஓட தொடங்கிவிட்டது. அதுவும் பல ஆபாச காட்சிகளைக் கொண்ட படம்.. இதில் விஷயம் என்னவென்றால் அதை அவர்களால் நிறுத்தவும் முடியவில்லை க்ளோஸ் செய்யவும் முடியவில்லையாம். இதனால் ஆபாசப் படம் முழுமையாக அதில் ஓடியிருக்கிறது. இந்த விமானத்தில் குழந்தைகள் உட்பட பலரும் குடும்பமாகப் பயணித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் அவர்கள் சங்கடத்திற்கு ஆளாகினர்.
குவான்டஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QF59 என்ற விமானத்தில் இது நடந்துள்ளது. நடுவானில் திடீரென அந்த படம் ஓட தொடங்கிய நிலையில், அதை யாராலும் நிறுத்தவே முடியவில்லையாம். இது தொடர்பாக அதில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், “அந்த வீடியோவை நிறுத்த முடியவில்லை. ஸ்கிரீனை மொத்தமாக ஆஃப் செய்யவும் முடியவில்லை. குழந்தைகளும் இருந்த நிலையில், அது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரம் அந்த படம் ஓடியது. அதன் பின்னரே அதை மாற்ற முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
குவாண்டாஸ் நிறுவனமும் இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது. விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவித்துள்ளது. விமான நிறுவனம் சார்பில் மேலும் கூறுகையில், “படம் ஓட தொடங்கிய சில நிமிடங்களில் இது அனைவருக்குமான படம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. படத்தைப் பார்க்க விரும்பாதவர்களின் ஸ்கிரீன்களை அணைக்க விமானப் பணிப் பெண்கள் முயன்றுள்ளனர். இருப்பினும், அதைச் செய்ய முடியவில்லை. இதையடுத்து சிறிது நேர முயற்சியில் குழந்தைகள் பார்க்கும் படத்தைப் பணிப் பெண்கள் ப்ளே செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு குவண்டஸ் விமான நிறுவனம் மன்னிப்பும் கேட்டுள்ளது. இது குறித்து விசாரணையைச் செய்து வருவதாகவும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்