18 வருடக் காத்திருப்பு வீண்: தி சாண்ட்ஸ் ஆஃப் டைம் (‘Sands of Time’) ரத்து – ரசிகர்கள் சோகம்.
பிரபல வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான யுபிசாஃப்ட் (Ubisoft), தனது நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் ‘பிரின்ஸ் ஆஃப் பெர்சியா: தி சாண்ட்ஸ் ஆஃப் டைம்’ (Prince of Persia: The Sands of Time) ரீமேக் உட்பட மொத்தம் 6 கேம்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
‘அசாசின்ஸ் கிரீட்’ (Assassin’s Creed) மற்றும் ‘ஃபார் க்ரை’ (Far Cry) போன்ற புகழ்பெற்ற கேம்களை உருவாக்கிய இந்த பிரெஞ்சு நிறுவனம், தனது செயல்பாடுகளில் “பெரிய மாற்றத்தை” (Major Reset) கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக:

இதில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ‘பிரின்ஸ் ஆஃப் பெர்சியா’ ரீமேக்கும் ( Prince of Persia remake) அடங்கும். மற்ற 5 கேம்களில் 4 இன்னும் அறிவிக்கப்படாத புதிய கேம்கள், மற்றொன்று மொபைல் கேம் ஆகும்.
தரம் மற்றும் லாபத்தை கருத்தில் கொண்டு 7 கேம்களின் வெளியீட்டுத் தேதியை நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் (Stockholm) மற்றும் கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) ஆகிய இடங்களில் இருந்த இரண்டு ஸ்டுடியோக்களை மூடுவதாக யுபிசாஃப்ட் (Ubisoft) அறிவித்துள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை பங்குச்சந்தையில் யுபிசாஃப்ட் (Ubisoft) நிறுவனத்தின் பங்குகள் 33% சரிவைச் சந்தித்தன. இது 1996-ம் ஆண்டிற்குப் பிறகு அந்த நிறுவனம் சந்திக்கும் மிகப்பெரிய ஒருநாள் சரிவாகும்.
யுபிசாஃப்ட் (Ubisoft) தலைவர் ஈவ் கில்லெமோட் (Yves Guillemot) இது குறித்து கூறுகையில், “இந்த முடிவுகள் கடினமானவை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் நிறுவனத்தை நிலையான வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல இவை அவசியமானவை” என்றார்.
சமீபகாலமாக ‘ஸ்டார் வார்ஸ் அவுட்லாஸ்’ (Star Wars Outlaws) போன்ற பெரிய கேம்கள் எதிர்பார்த்த லாபத்தைத் தராததும், தயாரிப்புச் செலவுகள் அதிகரித்ததும் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இதனால் நிறுவனம் சுமார் 1 பில்லியன் யூரோ இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.






