இலங்கையை விட்டு வெளியேறிய 175,163 இலங்கையர்கள்
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் 175,163 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைகளுக்காக குறித்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடர்புடைய காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 171,864 ஆகும்.
இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் மாத்திரம் 28,003 பேர் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன், குறித்த 07 மாத காலப்பகுதியில் அவர்களிடம் இருந்து 3,710.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது
(Visited 18 times, 1 visits today)