வட அமெரிக்கா

அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளானது .

இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள வீதியில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார் ஒன்றை மோதி தள்ளியதில் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் டிரக் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்