ஆசியா

பாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

ஆனால் கைதிகள் சிலர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தொழுகை நடைபெற்ற சமயத்தில் சில கைதிகள் சிறையில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர். இதனையறிந்த சிறை காவலர்கள் அவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். அவர்கள் தப்பி செல்வதற்கு வெளியில் இருந்து சிலர் உதவி உள்ளனர். தப்பி ஓடிய கைதிகளில் சிலர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமன் சிறைச்சாலையானது ஈரான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. எனவே கூட்டாளிகளின் உதவியுடன் இவர்கள் அங்கு தப்பி ஓடி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்காக சிறையில் இருந்து தப்பிய கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்