செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பாடசாலையில் இறந்து கிடந்த 16 வயது மாணவன்

திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியின் கிணற்றில் மாணவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து மாணவரின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் சின்னதம்பியின் 16 வயது மகன் முகிலன் . இவா் திருப்பத்தூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தாா்.

மேலும், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தாா். இந்த நிலையில், கடந்த 1ம் தேதி முகிலன் வகுப்புக்கு வராததால் பள்ளி ஆசிரியா்கள் மாணவனின் பெற்றோருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த முகிலனின் பெற்றோா் பள்ளிக்கு வந்து விசாரித்து உள்ளனா். அதைத் தொடா்ந்து, பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். மேலும் சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முகிலனை தேடி வந்தனா்.

இந்த நிலையில் மாணவரை கண்டுபிடிக்க வேலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பால் செய்யப்பட்ட வலைகள் மூலம் பூட்டப்பட்ட கிணற்றின் அருகே சென்று நின்றது.

போலீஸாா் கிணற்றின் உள்ளே பாா்த்தபோது மாணவரின் சடலம் கிணற்றில் மிதந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டபின், திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே முகிலனின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாகவும், தடயவியல் துறையினா் ஆய்வு செய்து, அதன்பின் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் முகிலனின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி