2026ம் ஆண்டில் இதுவரை 158,787 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2026ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின்(SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 28,686 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு இதுவரை ரஷ்யாவிலிருந்து 16,956 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,189 பேர், ஜெர்மனியிலிருந்து 10,837 பேர் மற்றும் 7,508 பிரெஞ்சு நாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு மொத்தமாக 2,362,521 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.





