டிரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்காவில் இருந்து 1,563 இந்தியர்கள் வெளியேற்றம்

ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு, 15,00க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“கடந்த ஆறு மாதங்களில் 1563 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஜனவரி 20 முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது. பெரும்பாலானோர் வணிக விமானம் மூலம் வந்துள்ளனர்” என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்ட கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நாடுகடத்தல்கள் உள்ளன.
தரவுகளின்படி, அமெரிக்காவில் 725,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிக்கின்றனர், இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாட்டினருக்குப் பிறகு மூன்றாவது பெரிய இனக்குழு ஆகும்.