இலங்கையில் இராணுவ பணியை கைவிட்ட 15,600 இராணுவத்தினர்
இராணுவத்தினருக்கு சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
அந்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக சேவையில் இருந்து வெளியேறியதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
2023 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்காக இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் 373 இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.





