பிரான்ஸ் தலைநகரில் பாதுகாப்பிற்காக களமிறங்கும் 15,000 இராணுவ வீரர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளின் 15,000 இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் மட்டும் 10,000 இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் முக்கிய நகரங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றில் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்துக்கான ஆளுனர் Christophe Abad, வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 250 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது.
(Visited 6 times, 1 visits today)