நைஜீரியாவில் 3 தேவாலயங்களில் இருந்து 150 வழிபாட்டாளர்கள் கடத்தல்
வடமேற்கு நைஜீரியாவில்(Nigeria) உள்ள மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்களை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்றதாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“நேற்றைய நிலவரப்படி, 177 பேர் காணாமல் போயிருந்தனர், மேலும் 11 பேர் திரும்பி வந்தனர். எனவே 168 பேர் காணவில்லை” என்று சட்டமன்ற உறுப்பினர் உஸ்மான் டான்லாமி ஸ்டிங்கோUsman Danlami Stingo) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த கடத்தல் குறித்து இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் இதுபோன்ற தாக்குதல்கள் பொதுவானவை.





