காங்கோவில் உயிருடன் எரியூட்டப்பட்டு 15 பேர் படுகொலை! அத்துமீறும் போராளிக்குழு!
காங்கோவில் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய போராளிக்குழுவொன்று நேற்று அதிகாலை முன்னெடுத்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக இடூரி (Ituri) மாகாணத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
நேச நாட்டு ஜனநாயகப் படை அல்லது ஏடிஎஃப் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு வீட்டில் 15 பேர் உயிருடன் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 07 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வேல்ஸ் வோன்குட்டு (Walese Vonkutu) நிர்வாகப் பகுதியில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏடிஎஃப் (ADF) படையின் இந்த ஊடுருவல் ஒரு உண்மையான படுகொலை” என்று மனித உரிமைகள் மாநாட்டின் தலைவர் கிறிஸ்டோஃப் முன்யாண்டெரு (Christophe Munyanderu) தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த படுகொலைகள் தொடர்பில் ஏடிஎஃப் (ADF) கட்சியிடமிருந்து உடனடி அறிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





