மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் மரணம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய(Israel) வீரர்கள் ஒரு பாலஸ்தீனிய சிறுவனை சுட்டுக் கொன்றுள்ளதாக பாலஸ்தீன(Palestinian) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரமல்லாவிற்கு(Ramallah) அருகிலுள்ள அல்-முகாயீர்(al-Muqayyir) கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்கள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 14 வயது முகமது நாசன்(Mohammed Nassan) உயிரிழந்துள்ளார்
நாசன் முதுகிலும் மார்பிலும் சுட்டு கொல்லப்பட்டதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் வஃபா(Wafa) தெரிவித்துள்ளது.
முகமது நாசன், வீரர்கள் மீது கல்லை வீசியதற்காக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




