பாகிஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 14 பேர் மரணம்!
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இண்டஸ் ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.கில்கிட் பால்திஸ்தான் மாநிலத்தில் புதன்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்தது.
மொத்தம் 27 பேர் அந்தப் பேருந்தில் பயணம் செய்ததில் ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 12 பேரைத் தேடும் பணி தொடருவதாக மாநில அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
மிதமிஞ்சிய வேகத்தில் பேருந்து சென்றதால் அதன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சக்வால் மாவட்டத்தை நோக்கிச் சென்ற திருமண ஊர்வலத்தில் பங்கேற்று அந்தப் பேருந்து சென்றதாக உள்ளூர் ஒலிபரப்பு நிறுவனமான ஜியோ கூறியது.
(Visited 11 times, 1 visits today)





