ஆப்பிரிக்கா செய்தி

ருவாண்டாவில் மண் சரிவில் சிக்கி 136 பேர் பலி

ருவாண்டாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர். மலை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழைபெய்து வருகின்றது. இந்நிலையில் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் ருவாண்டாவில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை பேரிடர் பாதிப்பாக இது கருதப்படுகிறது. அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது.

அந்நாட்டிலும் மண் சரிவு காரணமாக ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ருவாண்டாவில் கனமழை பெய்ய இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி