சிசிலியன் மாஃபியா மீது பெரிய அளவிலான சோதனையில் 130 பேர் இத்தாலியில் கைது
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-4-10-1280x700.jpg)
சிசிலியன் மாஃபியா மீது பெரிய அளவிலான சோதனையில் 130 பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று காராபினேரி போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
ஏனைய குற்றங்களுக்காக ஏற்கனவே சிறையில் இருந்த 33 சந்தேக நபர்களுக்கு மேலதிக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
செவ்வாயன்று கைது செய்யப்பட்டவர்கள் “கோசா நோஸ்ட்ராவுக்கு மிகவும் கடுமையான அடி” என்று இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, X இல் பதிவில் பாராட்டினார், மேலும் “மாஃபியாவுக்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை, நிற்காது” என்று தெளிவான சமிக்ஞையை அளித்தார்.