ஆஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் மாயம்… முதலை தாக்குதல் தொடர்பில் அச்சம்!

ஆஸ்திரேலியாவின் ‘நார்தன் டெரிட்டரி’ மாநிலத்தில் சிறுவர் ஒருவரைக் காணவில்லை. அவரை முதலை இழுத்துச் சென்றிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அந்த 12 வயது சிறுவன், ஆஸ்திரேலிய நேரப்படி ஜூன் 2ஆம் திகதி மாலை ஙான்மரியாங்கா நகருக்கு அருகில் நீந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுவரை முதலை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
‘நார்தன் டெரிட்டரி’ மாநிலத்தில் ஏறத்தாழ 100,000 உப்புநீர் முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வேறு எந்த இடத்திலும் இவ்வளவு உப்புநீர் முதலைகள் இல்லை.
இருப்பினும், முதலைத் தாக்குதல் சம்பவங்கள் அம்மாநிலத்தில் அரிது.
(Visited 50 times, 1 visits today)