இலங்கை செய்தி

போதகர் ஜெரோமின் 11 கணக்குகளில் 12 பில்லியன் ரூபாய்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது, ​​12.2 பில்லியன் ரூபா புழக்கத்தில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

போதகரின் 11 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது, அவருக்கு இந்தப் பணம் எப்படி வந்தது? அவற்றை டெபாசிட் செய்தது யார்? போன்ற தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவன தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“மிராக்கிள் டோம்” பிரார்த்தனை மையத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 2.5 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளார்.

மேலும் அந்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது? இன்னும் ஆழமான விசாரணை நடத்தப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை