ஆஸ்திரேலியாவில் 11 குழாய் குண்டுகள் கண்டுப்பிடிப்பு – புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் (Canberra) 11 குழாய் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குழாய் குண்டுகள் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பெல்கோனனில் (Belconnen) உள்ள ஜின்னிண்டெரா (Ginninderra) ஏரிக்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது.
சில குண்டுகள் கண்டுப்பிடிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனையவை சிறப்பு வெடிகுண்டு அகற்றும் குழுக்களால் செயலிழக்க செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புலனாய்வாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





