செய்தி தமிழ்நாடு

காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் உள்ள பூங்குன்ற நாயகி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த வாடிமஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 208 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் விரட்டி பிடித்தனர்.

இந்த மஞ்சுவிரட்டை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக தொழு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

முதலில் மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

பின்னர் வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசி சென்றது.

காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருவர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பூங்குன்றநாடான 24 அரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

(Visited 13 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி