கேமரூனில் சிக்கிய 47 தொழிலாளர்களில் 11 பேர் ஜார்கண்டிற்கு வருகை
மத்திய ஆபிரிக்காவில் உள்ள கேமரூனில் சிக்கித் தவித்த 47 தொழிலாளர்களில் 11 பேர் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், மீதமுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக திரும்புவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஜார்க்கண்ட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் சிக்கித் தவிக்கும் மாநிலத்தைச் சேர்ந்த 47 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் சில இடைத்தரகர்கள் மீது மாநில அரசு வழக்கு பதிவு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
“கேமரூனில் சிக்கித் தவித்த ஜார்கண்டில் இருந்து புலம்பெயர்ந்த 47 தொழிலாளர்களில் 11 பேர், முதல்வர் ஹேமந்த் சோரனின் அறிவுறுத்தலின்படி மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் துறையால் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 36 தொழிலாளர்களும் திரும்ப உள்ளனர்.” என்று முதலமைச்சர் செயலகத்தில் இருந்து ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.