அரசு பேருந்து விபத்து 10 பேருக்கு படுகாயம்

நேற்று இரவு தென்காசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து தாம்பரம் குரோம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிக்னல் போட்டதும் நின்ற மாநகர பேருந்தில் அதன் பிண்னால் வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து வேகமாக மோதியது இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் 10 பேருக்கு காயம் ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு.
தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விபத்துக்குள்ளான பயணிகள் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)