செய்தி

கொழும்பில் 10 வெளிநாட்டு பெண்கள் கைது – நாடு கடத்த நடவடிக்கை

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 09.00 மணியளவில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டு, அங்கு பணிபுரிந்து வந்த மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்கு வந்திருந்தனர், அவர்களில் நான்கு பேர் சுற்றுலா விசாக்கள் காலாவதியாகிய பின்னரும் தங்கியிருந்தனர்.

25 முதல் 39 வயதுக்குட்பட்ட இந்தப் பெண்களில் 06 பேர் தாய்லாந்து நாட்டினர். மீதமுள்ள 03 பேர் வியட்நாம் நாட்டினர், மற்றவர் சீன நாட்டவர் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் குழு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விரைவில் அவர்களின் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி