அமெரிக்கா, கனடாவில் மீளக்கோரப்படும் 10 லட்சம் குக்கர்கள்
அமெரிக்கா, கனடாவில் 10 லட்சம் பிரஷர் குக்கர்களையும் உள் பாத்திரங்களையும் அமெரிக்காவிலுள்ள பெஸ்ட் பை நிறுவனம் மிளக்கோரியுள்ளது.
அமெரிக்காவிலும் கனடாவிலும் சுமார் 9.30 லட்சம் இன்சிக்னியா பிரஷர் குக்கர்களை இந்த நிறுவனம் விற்றிருக்கிறது.
2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் இவை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் அளவுகள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக குக்கரைத் திறக்குபோது உணவுப் பொருள்களுடன் திரவமும் வெளிவந்துவிடுகின்றன. பயன்படுத்துவோர் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
தீக்காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்ட 17 புகார்கள் உள்பட, உணவுப் பொருள்கள் கொட்டிவிடுவதாக 31 புகார்கள் பெஸ்ட் பை நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளன. கனடாவில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், குக்கர்களை மாற்றிக்கொள்ள பெஸ்ட் பை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.