பெருவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 08 மம்மிகள் கண்டுப்பிடிப்பு!
பெருவின் லிமாவில் உள்ள எரிவாயு தொழிலாளர்கள், இந்த வாரம் எட்டு மம்மிகள் மற்றும் பல இன்காவிற்கு முந்தைய கலைப்பொருட்களை நகரத்தின் பண்டைய தெருக்களில் கண்டுப்பிடித்துள்ளனர்.
பெருவின் தலைநகரில் 10 மில்லியன் மக்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனமான கலிடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜீசஸ் பஹமொண்டே இது குறித்து கருத்து வெளியிடுகையில், “லிமாவின் இழந்த வரலாற்றின் இலைகளை நாங்கள் மீட்டெடுக்கிறோம், அவை தடங்கள் மற்றும் தெருக்களுக்கு அடியில் மறைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 1,900 க்கும் மேற்பட்ட தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மம்மி செய்யப்பட்ட எட்டு ஆண்களும் பருத்தி துணியால் சுற்றப்பட்டு, கொடிகளால் செய்யப்பட்ட கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கும் அவர், அவர்கள் தரையில் இருந்து ஒரு அடி ஆழத்தில் ஒரு அகழியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
லிமா மனித ஆக்கிரமிப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது, என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.