பால்கனில் சீரற்ற காலநிலை காரணமாக 06 பேர் உயிரிழப்பு!
பால்கனில் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில். பால்கனில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (20.07) காலை வீசிய சூறாவளி காற்று காரணமாக தீ வேகமாக பரவிய நிலையில், அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரமான Tovarnik இல் உள்ள அதிகாரிகள், தீயணைப்பு வீரர் “துரதிர்ஷ்டவசமாக” இறந்துவிட்டார் என்று கூறினார், ஆனால் வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
ஸ்லோவேனியா, குரோஷியா மற்றும் செர்பியாவின் சில பகுதிகளில் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





