ஐரோப்பா

மலையேற்றத்தில் ஈடுபட்ட 05 ஜெர்மன் பிரஜைகள் உயிரிழப்பு!

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையேற்றத்தில் ஈடுபட்ட ஐவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணின்  உடல்  நேற்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காணமல்போயிருந்த மேலும் இரண்டு பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய இரண்டுபேர் ஆபத்தான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் பனிச்சரிவு விபத்துகள் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சில பகுப்பாய்வுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!