ஹெல்மெட் அணியாமல் வந்த யூடியூபர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம்
போரூர் போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி – மவுண்ட் சாலை போரூர் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை மடக்கி அபராதம் விதித்து கொண்டிருந்தனர்.
அப்போது மொபெட்டில் வந்த தாய், மகன் இருவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது மொபெட்டை ஓரம் கட்ட சொல்லும்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலரின் கால் மீது மொபெட்டின் முன்பக்க டயர் ஏறியதில் போக்குவரத்து போலீஸ்காரரின் கால் மீது ஏறியதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது,
இதனால் போக்குவரத்து போலீசாருக்கும் அந்த பெண்மணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தனது மகனுடன் வந்த அந்த பெண்மணி தன்னை யார் என்று தெரியாதா என்றும் தன் மீது வழக்கு போடுகிறாயா என்று நாளை செய்தியில் பாருங்கள் என கூறி தனது மகனால் தான் இந்த இடத்தில் நிற்கிறேன்,
என கூறி தனது மகனை சரமாரியாக தாக்கி விட்டு சாலை மறியலில் ஈடுபட போவதாக சென்றார் அப்போது அவரது மகன் அந்த பெண்ணை மடக்கி சமாதானம் செய்தார்.
இந்த நிலையில் காயம் அடைந்த காவலரும் பெண் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தனர் இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தற்போது பிரச்சினையில் ஈடுபட்டவர் யூடியூபர் சுந்தரவல்லி என்பதும் உடன் வந்து அவரது மகன் என்பது தெரியவந்தது சுந்தரவல்லி தனது மகனுடன் ஹெல்மட் அணியாமல் வந்து போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.